ஆறு மாதங்களில் 2-ஆவது முறையாக விலையை உயர்த்திய சாம்சங், சியோமி

இந்த ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை முறையே ரூ. 17,499 என மாறியுள்ளது.
Samsung Galaxy M17
Published on

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M17, கேலக்ஸி F17, கேலக்ஸி F70e 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் சியோமி நிறுவனத்தின் பேட் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் டேப்லெட் மாடல் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களது சாதனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது.

இந்த சாதனங்களின் விலை உயர்த்தப்படுவது முதல் முறையல்ல. சியோமி பேட் 8 மாடல் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் சாம்சங் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் கந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளன.

விலை உயர்வு:

சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாடல்களின் விலை முறையே ரூ. 1000, ரூ. 2000 மற்றும் ரூ. 3000 உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி மெமரி மாடல் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதேபோல் சாம்சங் கேலக்ஸி F70e 5ஜி மற்றும் கேலக்ஸி M17e 5ஜி ஸ்மார்ட்போன்களின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 2000 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்களின் தொடக்க விலை முறையே ரூ. 17,499 என மாறியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 13,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி டேப்லெட்:

சியோமி இந்தியா ஆன்லைன் தளத்தில் சியோமி பேட் 8 மாடலின் புதிய விலை மாற்றப்பட்டுவிட்டது. அதன்படி இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38,999 என மாறியிருக்கிறது.

இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,999 என மாறி இருக்கிறது. முன்னதாக ஜூன் மாத வாக்கில் இரு வேரியண்ட்களின் விலை ரூ. 35,999 மற்றும் ரூ. 38,999 என உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த மாடலின் விலை முறையே ரூ. 3000 மற்றும் ரூ. 5000 உயர்த்தப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com