ஏஐ மூலம் பாதுகாப்பான பண பரிவர்த்தனை: சாட்ஜிபிடி வாலெட் சேவையை அறிமுகப்படுத்திய ஓபன்ஏஐ

ஃபேஸ் ஐடி அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற பாதுகாப்பு சோதனையின் மூலம் அதை அங்கீகரிக்கலாம்.
ChatGPT
Published on: 

பயனர்களின் அட்டை விவரங்களை அணுகாமலேயே, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பு சரிபார்ப்பு தேவைப்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு முகவர்கள் பொருட்களை வாங்குவதற்கு பணம் செலுத்த அனுமதிக்கும் சாட்ஜிபிடி வாலெட் (ChatGPT Wallet) அறிமுகப்படுத்தியுள்ளதாக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர்கார்டு மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து இந்த வாலட் உருவாக்கப்பட்டுள்ளது என ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

இது ஆரம்பத்தில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட தகுதியான அட்டைகளை கொண்ட, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ரோ (ChatGPT Pro) சந்தாதாரர்களுக்கு கிடைக்கும். நிறுவனத்தின் எப்போதும் இயங்கும் ஏஐ முகவர்களான "டாட்ஸ்" மூலம் இதை அணுகலாம்.

பாதுகாப்பு சோதனை:

பயனர்கள் ஒவ்வொரு கொள்முதலுக்கும் முன்பு, பொருட்கள், மொத்த தொகை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டை ஆகியவற்றை சரிபார்த்து, பின்னர் ஃபேஸ் ஐடி அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற பாதுகாப்பு சோதனையின் மூலம் அதை அங்கீகரிக்கலாம்.

பணம் செலுத்தும் நெட்வொர்க், உண்மையான அட்டை விவரங்களுக்கு பதிலாக ஒரு பேமெண்ட் டோக்கனை வழங்கும், எனவே வணிக நிறுவனமோ அல்லது முகவரோ அவற்றை பார்க்க முடியாது என்று அந்த நிறுவனம் கூறியது.

செலவு வரம்புகள், பிரிவுகள் அல்லது காலக்கெடு போன்ற குறிப்பிட்ட வரையறைகளுக்குள், பயனர்கள் இறுதியில் கொள்முதல்களை முகவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று OpenAI எதிர்பார்க்கிறது.

X