

ஓபன்ஏஐ நிறுவனம், GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் தனது அதிநவீன ஏஐ மாடலை ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்ட ஏஐ மாடல்களிலேயே GPT-6 Astra மிகவும் சக்திவாய்ந்தது என ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
வணிகங்களுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த ஏஐ மாடல் பெரும் பக்கபலமாக இருக்கும் என்று சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய மாடல் குறித்து ஓபன்ஏஐ தலைவர் கிரெக் புராட்மேன் பேசுகையில், "நாம் இப்போது AGI எனும் Artificial General Intelligence யுகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
எதிர்காலத்தில் ஏஐ வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, ‘Astra'வின் வெளியீடு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்" எனக் கூறியுள்ளார்.
கோடிங் மற்றும் சிக்கலான கணிதப் புதிர்களைத் தீர்ப்பதில் Astra முந்தைய மாடல்களை விடப் பல மடங்கு சிறந்து விளங்குகிறது.
ஓபன்ஏஐ நடத்திய சோதனைகளில், இது GPT 5.6 Sol மற்றும் ஆந்திராபிக் நிறுவனத்தின் Claude Fable மாடல்களை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
ஏஐ மாடல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு மட்டுமின்றி, மனிதர்களைப் போலவே தானாகவே இயங்கி பல சிக்கலான பணிகளை செய்யும் திறன் Astraவுக்கு உண்டு.
ஆன்லைன் படிவங்களை நிரப்புதல், அட்டவணைகளை நிர்வகித்தல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல், வெப் டிசைன், சாப்ட்வேர் இன்ஸ்டால், 3D மாடல் க்ரியேஷன், Presentation, சட்ட ஆவணங்கள் மற்றும் Tax Returnகளை தயாரிப்பது முதற்கொண்டு பல விஷயங்களை Astra செய்து முடிக்கும் வல்லமை கொண்டது.
கடைசியாக ஆந்தோரோபிக் நிறுவனத்தின் கிளாட் மிதோஸ் மாடல் குறித்த தகவல்கள் கசிந்தபோது அது சைபர் பாதுகாப்பை ஊடுருவும் திறன் கொண்டது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஓபன் ஏஐயின் இந்த Astra மாடல் அதே அளவு திறன் கொண்டதால் கூடுதல் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு வளையங்களையும் ஓபன்ஏஐ நிறுவியுள்ளது.
ஏஐ மாடல்களின் சைபர் பாதுகாப்பு தன்மையை சோதனை செய்யும் ExploitBench அமைப்பு Astra மாடலுக்கு சைபர் பாதுகாப்பில் 100 சதவீத மதிப்பெண் வழங்கியுள்ளது.
சைபர் பாதுகாப்பிற்கான ஓபன்ஏஐ நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி தளமான OpenAI Daybreak பயனர்களுக்கு மட்டும் Astra ஏஐ மாடல் தற்போது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது
அடுத்த வாரம் முதல் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் சாட்ஜிபிடி சந்தாதாரர்களுக்கு இது படிப்படியாகக் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும், ஓபன்ஏஐ API, AWS மற்றும் Amazon Bedrock ஆகிய தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.