மியூஸ் வொண்டர்: ஜுக்கர்பெர்க் சம்பவம்.. புதிய மாடல் அறிமுகம் - ஏஐ ரேஸில் முந்திய மெட்டா?

'ஆக்டிவ் மெமரி' தொழில்நுட்பம் இதில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெட்டா
Published on: 
Summary

மெட்டா நிறுவனம் மியூஸ் வொண்டர் என்ற அதிநவீன ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மெட்டா நிறுவனம், மியூஸ் வொண்டர் மற்றும் மியூஸ் வொண்டர் ஃபுல் என்ற இரண்டு புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மியூஸ் ஸ்பார்க்கை விட மியூஸ் வொண்டர் மாடல் மேம்பட்டதாக உள்ளது என்றும், இது மெட்டாவை மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடல்களை உருவாக்கும் நிறுவனங்களின் வரிசையில் சேர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சம்

மெட்டாவின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸின் கூற்றுப்படி, மியூஸ் வொண்டர் என்பது மெட்டாவின் மிகவும் திறன் வாய்ந்த மாடல் ஆகும்.

சாப்ட்வேர் டெவலப்மெண்ட், ஆப் மற்றும் கேம் உருவாக்கம், நிதி, சட்டம் மற்றும் சுகாதாரம் சார்ந்த நீண்ட காலப் பணிகளை துல்லியமாகக் கையாளும் வகையில் இது வடிவடிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் வழங்கும் தகவல்களை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பாதுகாப்பாக நினைவில் வைத்துக்கொண்டு ஒருங்கிணைக்கும் 'ஆக்டிவ் மெமரி' தொழில்நுட்பம் இதில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 'MemoryBench' சோதனைகளில் மெட்டா ஸ்பார்க் மாடலை விட சிறப்பாகச் செயல்பட்டதுடன், ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ மற்றும் கூகிள் உருவாக்கிய பல மாடல்களையும் விஞ்சியுள்ளது.

பிரீமியம் பயனர்கள், மெட்டாவின் ஏஐ அசிஸ்டன்ட் செயலியான மியூஸ் (Muse) மூலம், இந்த 2 புதிய ஏஐ மாடல்களையும் விரைவில் அணுக முடியும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com