கட்டணத்தை அதிகரித்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்த ஜியோ

98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும்.72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும்.
கட்டணத்தை அதிகரித்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்த ஜியோ
Published on

ரிலையன்ஸின் ஜியோ செல்போன் சேவை நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் 72 மற்றும் 98 நாட்கள் என இரண்டு ப்ரீபெய்டு பிளான்களை அறிவித்துள்ளது.

98 நாட்கள் பிளான்

98 நாட்கள் பிளான் 999 ரூபாய் கொண்டதாகும். இந்த பிளான்படி தினந்தோறும் 2GP டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு 2GB என்ற வகையில் 98 நாட்களுக்கு மொத்தம் 196GB டேட்டா வழங்குகிறது. தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். அன்லிமிடெட் 5G டேட்டா வசதி இடையூறு இல்லாமல் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் வசதியையும் உள்ளடக்கியது.

72 நாட்கள் பிளான்

72 நாட்கள் பிளான் 749 ரூபாய் வசதி கொண்டதாகும். இந்த திட்டத்தில் தினந்தோறும் 2GB டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக 20GB உடன் மொத்தம் 164GB டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினந்தோறும் 100 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்ய முடியும். அன்லிமிடெட் 5G பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த காலக்கட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com