

ஐகூ நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் 2026 சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ஐகூ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள், தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜூலை 04-ஆம் தேதி தொடங்கும் அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 06-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சிறப்பு விற்பனையில் பயனர்கள் ஐகூ நிறுவனத்தின் நான்கு ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்த விற்பனை அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்காக பிரத்யேகமாக நடைபெறுகிறது.
சலுகை விவரங்கள்:
ஐகூ Z11x தற்போதைய ரூ. 22,999 விலையில் இருந்து ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ. 20,999-க்கு கிடைக்கும்
ஐகூ நியோ 10 ரூ. 41,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ. 38,999 விலையில் கிடைக்கும்
ஐகூ 15R மாடல் ரூ. 49,999-க்கு கிடைக்கும் நிலையில், இதன் விலை ரூ. 4,000 குறைக்கப்படுகிறது.
ஐகூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ. 71,999-க்கு கிடைக்கும்
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு ஸ்மார்ட்போன் மாடல்களும் அதன் அறிமுக விலையில் இருந்து ரூ. 1,000 கூடுதல் விலைக்கே தற்போது விற்பனைக்கு வருகின்றன. முன்னதாக இந்த மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்தே தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி பயனர்களுக்கு நிம்மதியை கொடுக்கும். தள்ளுபடி மட்டுமின்றி இந்த விற்பனை வங்கி மற்றும் கார்டுகளுக்கு கூடுதல் பலன்களும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.