

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6), இன்று (நவ. 19) இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X மற்றும் S-இல் வெளியானது.
இந்த கேம், வீரர்களை மீண்டும் வைஸ் சிட்டிக்கு அழைத்து செல்கிறது. இம்முறை, இது லியோனிடா என்ற பெரிய கற்பனை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதில் ஜேசன் மற்றும் லூசியா என்ற முக்கிய கதாபாத்திரங்களை மையமாக கொண்ட ஒரு புதிய கதை இடம்பெறுகிறது.
முதற்கட்டமாக ஜிடிஏ 6 பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X மற்றும் S கன்சோலில் வெளியான நிலையில் இன்னும் கணினிக்கான வெளியீட்டு தேதியை ராக்ஸ்டார் நிறுவனம் அறிவிக்கவில்லை.
இந்த கேம், ஃபுளோரிடாவால் ஈர்க்கப்பட்ட ஒரு கற்பனை மாநிலமான லியோனிடாவில் நடைபெறுகிறது, வைஸ் சிட்டி அதன் மைய இடமாக செயல்படுகிறது. ஒரு கொள்ளை முயற்சி தவறாக போன பிறகு, ஒரு குற்ற சதியில் சிக்கிக்கொள்ளும் ஜேசன் மற்றும் லூசியாவை பின்தொடர்கிறது இதன் கதை. கேமர்கள், இந்த இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியாகவும் குற்ற உலகத்தில் பயணிக்கும்போது கதையை அனுபவிக்கலாம்.
ராக்ஸ்டாரின் டிரெய்லர்கள், பரபரப்பான நகர வீதிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இடங்களை கொண்ட ஒரு பெரிய திறந்த உலகத்தை காட்சிப்படுத்தியுள்ளன. அவை லியோனிடா முழுவதும் வாகனம் ஓட்டுதல், துப்பாக்கி சண்டைகள், கொள்ளைகள், இரவு வாழ்க்கை மற்றும் அன்றாட நடவடிக்கைகள் ஆகியவற்றின் காட்சிகளையும் வழங்குகின்றன.
GTA 6, ஸ்டாண்டர்ட் மற்றும் அல்டிமேட் என இரு வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் வெர்ஷனில் அடிப்படை விளையாட்டு அடங்கும், அதேசமயம் அல்டிமேட் வெர்ஷன், ஜேசன் மற்றும் லூசியாவின் கதையுடன் தொடர்புடைய பல விளையாட்டு பொருட்கள் மற்றும் இடங்களை சேர்க்கிறது.
இந்த கூடுதல் அம்சங்களில், கூடுதல் வாகனங்கள், ஆயுதங்கள், ஆயுத வகைகள், ஆடை தேர்வுகள், பாதுகாப்பான தங்குமிட வாகனங்கள் மற்றும் மோட் ஷாப், சலூன், டாட்டூ பார்லர் போன்ற வணிகங்கள் அடங்கும்.
கதையின் வெவ்வேறு அத்தியாயங்களில் வீரர்கள் முன்னேறும்போது, இந்த பொருட்களில் சிலவற்றை கண்டுபிடிப்பார்கள் என்று ராக்ஸ்டார் கூறுகிறது. அல்டிமேட் வெர்ஷனில் தனியான கேம்பெயின் அல்லது கதை விரிவாக்கம் எதுவும் இல்லை.