

வீடியோ கேம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜி.டி.ஏ (Grand Theft Auto) கேமின் அடுத்த வெர்சனான ஜி.டி.ஏ.6-இன் முன்னோட்ட 26 நிமிட காணொளி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
ராக்ஸ்டார் வெளியிட்டுள்ள காணொளியில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான ஜேசன் டுவால் மற்றும் லூசியா கமீனோஸின் வாழ்க்கை இடம்பெற்றிருந்தன.
ஜி.டி.ஏ (GTA) கேம் என்பது அமெரிக்க நகரத்தில் வசிக்கும் ஒருவர், அந்த தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களையோ அல்லது காரில் வரும் வேறொருவரை வெளியே இழுத்து தள்ளிவிட்டு, அந்த வாகனத்தை திருடி செல்வதுதான் கதைக்களமாக உள்ளது.
இதையடுத்து அந்த நபர் காரை எடுத்தவுடன், அவருக்கு ஒரு வேலையை முடிக்குமாறு ஒரு டாஸ்க் (task) கொடுக்கப்படுகிறது.
அந்த டாஸ்கை எந்த நபர் முடிக்க திருடப்பட்ட வாகனத்தில் செல்லும்போது, காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, அந்த காரை காவல்துறை விரட்டி துரத்துவதும் கதைக்களமாக உள்ளது.
இந்த கேமில் பல அம்சங்கள் வீடியோ கேம் பயனர்களுக்கு அளிக்கப்பட்டு, சுவாரஸ்யமாக விளையாட தூண்டுகிறது. இந்த வீடியோ கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியானதில் இருந்து, உலகம முழுவதும் பல கோடி கேம் பிரியர்களால் விளையாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து வெளியான தொடர்களில், ஜேசன் டுவால் என்ற கதாபாத்திரத்திற்கும் லூசியா கமீனோஸ் என்ற மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையேயான காதல் உறவு அறிமுகம் செய்யப்பட்டது.
ராக்ஸ்டார் நிறுவனம் கடந்த 2018-இல் வெளியிட்ட ‘ரெட் டெட் ரிடெம்ப்ஷன் 2’ என்ற தொடரில், பயனர்கள் விளையாடும் முக்கிய கதாபாத்திரம் செய்யும் செயலானது, அந்த கதாபாத்திரத்தின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து 2013-இல் வெளியான ஜிடிஏ-5 வீடியோ கேம், 2,000 கோடிக்கும் அதிகமான பிரதிகளை விற்பனை செய்தது.
மேலும் உலகம் முழுவதும் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக மாறியது. இது ராக்ஸ்டார் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஈட்டித் தருவதாக அமைந்தது.
இந்த நிலையில் ராக்ஸ்டார் நிறுவனம் தனது அடுத்த மேம்படுத்தப்பட்ட வெர்சனான ஜிடிஏ-6 வீடியோ கேமின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யூடியூப் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இந்த 26 நிமிட காணொளி 5,000 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த புதிய வெர்சன் நவம்பர் 19 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ராக்ஸ்டார் வெளியிடவுள்ள ஜிடிஏ-6 வீடியோ கேம், பார்வையாளர்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதை பொறுத்தே இதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.