

ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இருப்பினும், ப்ளிப்காரட் நிறுவனம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இந்த சலுகைகளுக்கான முன்கூட்டிய அணுகலை வழங்கும்.
முன்கூட்டிய சலுகைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, இங்கிலாந்தை சேர்ந்த நத்திங் ஸ்மார்ட்போன் நிறுவனம், நத்திங் போன் (4a), போன் (4a) ப்ரோ மற்றும் சமீபத்திய போன் (4b) ஆகியவை இந்த விற்பனை நிகழ்வின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். வாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேஞ்ச் போனஸ்களை பெற முடியும், இதன் மூலம் அவர்கள் ரூ. 6,000 வரை சேமிக்கலாம்.
கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம், ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது நத்திங் ஃபோன் (4a), ஃபோன் (4a) ப்ரோ மற்றும் ஃபோன் (4b) ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்தது. மேலும், அந்நிறுவனம் தள்ளுபடி மற்றும் சலுகை விவரங்களை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய நத்திங் ஃபோன் (4b), கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ. 3,000 வரையிலான வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கும். மாற்றாக, வாங்குபவர்கள் வழக்கமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2,625 வரையிலான வங்கி தள்ளுபடி பெற முடியும்.
ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் மூலம் ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படும், இது நத்திங் போன் (4b)-இன் விலையை ரூ. 30,999 ஆக குறைக்கிறது. நத்திங் போன் (4a) ரூ. 37,999 என்ற விலையில் கிடைக்கும், இதில் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 4,000 வரையிலான வங்கித் தள்ளுபடியும், ரூ. 1,000 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் அடங்கும்.
ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மூலம் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தினால், அவர்களுக்கு ரூ. 3,225 வரையிலான வங்கி தள்ளுபடி வழங்கப்படும்.
கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகள் மூலம் நத்திங் போன் (4a) ப்ரோ வாங்கும் போது ரூ. 4,500 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும்.
வாங்குபவர் முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த விரும்பினால், வரவிருக்கும் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் அவர்களுக்கு ரூ. 3,750 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், போன் (4a) ப்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,500 வரையிலான எக்சேஞ்ச் போனஸ் பெறலாம்.