

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL), நுகர்வோருக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் ரூ.40-க்கும் குறைவான விலையில் 20 ஜிபி டேட்டாவை பெற முடியும். பொதுவாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும்.
ஒரே நாளில் அதிக பயன்பாட்டிற்கான டேட்டா வவுச்சரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு டேட்டா வவுச்சருக்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.39 ஆகும்.
பி.எஸ்.என்.எல். ரூ.39 திட்டத்தில் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு நாள் மட்டுமே. எனவே, இது போதுமான டேட்டாவை வழங்கினாலும், இதில் ஒரு கூடுதல் செலவும் அடங்கியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்திய பிறகு, டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைந்துவிடும்.
இது ஒரு டேட்டா வவுச்சர் என்பதால், சேவை செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது மட்டுமே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும் .
இதேபோல் ரூ.19 ரீசார்ஜ் திட்டமும் உள்ளது, இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயனர்களுக்கு கிடைக்கும் டேட்டா வவுச்சர்களிலேயே இதுதான் மிகவும் மலிவானது. ரூ.19 திட்டம் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இரண்டு திட்டங்களும் 1 நாள் வேலிடிட்டி காலத்தை கொண்டிருந்தாலும், ரூ.39 திட்டம் 20 ஜிபி டேட்டாவையும், ரூ.19 திட்டம் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் கிடைக்கின்றன. மேலும், ரூ.58 திட்டமும் உள்ளது, இதன் மூலம் பயனர்கள் 7 நாட்கள் வேலிடிட்டி பெற முடியும். இந்தத் திட்டத்தில் 8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவை எனில், இந்தத் திட்டம் சிறந்தது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்த பிறகு, டேட்டா வேகம் 40 kbps ஆக குறைந்துவிடும்.