

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் சாதனங்களை தவிர மற்ற அனைத்து பொருட்களின் ஆரம்ப விலையையும் சுமார் 100 டாலர் வரை சர்வதேச அளவில் உயர்த்தியது.
இந்நிலையில் ஏற்கனவே சந்தையில் அறிமுகமான ‘மேக் புக் நியோ’ லேப்டாப்பை தற்போது புதுப்பித்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் அடிப்படை விலை டாலர் 599-ஆகவும், மேலும் 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் ஆரம்ப விலை டாலர் 679-ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆப்பிள் பயனர்களுக்கு வழக்கம்போல ஓராண்டிற்கான அதிகாரப்பூர்வ உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் பயனர்களின் பணத்தை சேமிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் தயாரிப்புகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தவகை மேக் புக் நியோ லேப்டாப் உடன், ஒரு USB type C கேபிளும், 20 வாட்ஸ் பவர் அடாப்டரும் விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.