மாணவர்களுக்கு அதிரடி சலுகைகள்.. ஆப்பிள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு அதிரடி சலுகைகள்.. ஆப்பிள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Published on

ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com