தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஃபர் அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது.
Airtel Diwali Offer
Published on: 
Summary

ஏர்டெல் நிறுவனம் தீபாவளி கா தயோஹார் என்ற பெயரில் ரூபாய் 2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூபாய் 8,000 மாதாந்திர போனஸ் மற்றும் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெல் தீபாவளி ஆஃபர்

இதன்படி ரூபாய் 349 அல்லது ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒரு மாத காலத்திற்கான கூடுதல் ரிசார்ஜ் ஆஃபர் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகையான ஆஃபர்கள் சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்லில் ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி டேட்டாவும், ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ் வசிதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

போலி ஆஃபர்

இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் தீபாவளி போனஸ் கூப்பன்கள் மற்றும் ஆஃபர்களை, "ஏர்டெல் - தீபாவளி கா தயோஹார்" என்ற பெயரில் வழங்குவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

மேலும் ரூ.2,000 தீபாவளி ரீசார்ஜ், ரூ.8,000 மாதாந்திர போனஸ் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் குலுக்கல் கூப்பன்களை வழங்குவதாக வாட்ஸ்அப் செய்திகள் வெளியாகின.

வாடிக்கையாளர் எச்சரிக்கை

இந்த நிலையில், இந்த வகையான செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும், பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை தவிற, வேறு தளத்தில் பணத்தை செலுத்தி இழந்துவிட வேண்டாம் எனவும் இணைய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

X