குறைந்த விலை அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி ஸ்மார்ட்போன் - கோப்புப்படம்
ரெட்மி ஸ்மார்ட்போன் - கோப்புப்படம்
Published on

சியோமியின் ரெட்மி 10 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்பே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. அந்த வரிசையில் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போன், சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 21061119AG மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தியா வரும் முன் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 விவரங்கள் எதையும் சியோமி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com