அசத்தல் அம்சங்களுடன் ஜிடி சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த ரியல்மி

ரியல்மி நிறுவனத்தின் ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இம்மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன.
ரியல்மி ஜிடி
ரியல்மி ஜிடி
Published on

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஜிடி சீரிஸ் விலை ரூ. 25,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி ஜிடி மாடலில் 16 எம்பி செல்பி கேமரா, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.

ரியல்மி ஜிடி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, வைபை, ப்ளூடூத் அம்சங்கள் உள்ளன. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி ஜிடி மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com