இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ்
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒப்போ வாட்ச் போன்றே புதிய ஒன்பிளஸ் வாட்ச் மாடலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பேண்ட் மாடலை தொடர்ந்து ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் இரண்டாவது அணியக்கூடிய சாதனமாக ஒன்பிளஸ் வாட்ச் இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒன்பிளஸ் பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்போதைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஆட்டோமேடிக் வொர்க்-அவுட் டிடெக்ஷன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார், ஸ்டிரெஸ், ஸ்லீப் டிராக்கிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது போன்ற வசதியும் வழங்கப்படலாம். இதில் வழங்கப்படும் பேட்டரி 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதுதவிர வார்ப் சார்ஜ் தொழில்நுட்பம், 4 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com