முந்தைய ஸ்மார்ட்போன்களை விட 324 சதவீதம் அதிகம் - முன்பதிவில் அசத்தும் ஒன்பிளஸ் 9 சீரிஸ்

இந்தியாவில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு அமோக வரவேற்பை பெற்று வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
ஒன்பிளஸ் 9 சீரிஸ்
ஒன்பிளஸ் 9 சீரிஸ்
Published on

ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுக்கான முதல் நாள் முன்பதிவு முந்தைய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களை விட 324 சதவீதம் அதிகமாக நடைபெற்று இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவிததார்.

எனினும், முதல் நாளில் எத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை. முதற்கட்டமாக ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9ஆர் மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது.

இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 9 துவக்க விலை ரூ. 49,999 என்றும், ஒன்பிளஸ் 9 ப்ரோ துவக்க விலை ரூ. 64,999 என்றும் ஒன்பிளஸ் 9ஆர் துவக்க விலை ரூ. 39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஒன்பிளஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com