மோட்டோ 360 3rd Gen இந்தியாவில் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
மோட்டோ 360 3rd Gen
மோட்டோ 360 3rd Gen
Published on

மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மே மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டது. எனினும், தற்போது தான் இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. 

புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ 360 மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவ AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன் கேஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் PVD கோட்டிங் (ஸ்டீல் கிரே, ரோஸ் கோல்டு) அல்லது DLC கோட்டிங் (பேண்டம் பிளாக்) செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

கூகுள் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 4.1, சிங்கில் பேண்ட் வைபை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com