இணையத்தில் லீக் ஆன இரு ஐபோன்களின் ரென்டர்

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் மாடல்களின் ரென்டர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஐபோன் எஸ்இ
ஐபோன் எஸ்இ
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்களின் விவரங்கள், கான்செப்ட் ரென்டர் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன. அதன்படி தற்சமயம் ஐபோன் எஸ்இ3 மற்றும் ஐபோன் 12எஸ் ப்ரோ மாடல்களுக்கான ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஐபோன் எஸ்இ 3 மாடல் தோற்றத்தில் 2020 ஐபோன் எஸ்இ மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் புதிய ரென்டரில் ஐபோன் எஸ்இ3 ஹோம் பட்டன் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. ஐபோன் 12எஸ் ப்ரோ ஐபோன் 12 ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களில் ஐபோன் 12எஸ் ப்ரோ ஐபோன் 13 ப்ரோ என்றும் இது 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. புதிய ரென்டர்களின் படி ஐபோன் 12எஸ் ப்ரோ மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே டச் ஐடி கைரேகை சென்சார் மற்றும் பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

ஐபோன் எஸ்இ3 ரென்டர்களின் படி இதன் பின்புறம் ஒற்றை 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5.4 இன்ச் எல்சிடி பேனல், 4 ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையை பொருத்தவரை ஐபோன் எஸ்இ3 துவக்க விலை 499 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com