பாஜி கேம் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியாவில் பப்ஜி மொபைலுக்கு மாற்றாக உருவாகி வரும் பாஜி கேம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாஜி
பாஜி
Published on

பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் பாஜி கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த கேம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் பாஜி கேம் டிரெயிலரில் கேம்பிளே காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

பிளே ஸ்டோரில் இந்த கேம் விவரங்கள் மற்றும் டிரெயிலர் காட்சிகளை பார்க்கும் போது, இது இந்திய எல்லையின் வடக்கு பகுதியில் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது போன்ற கதையம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

மேலும் இது மற்ற கேம்களை போன்று இன்-ஆப் பர்சேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் கேம் வெளியானதும் அறிவிக்கப்படலாம். இந்த கேமிற்கான முன்பதிவு தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com