ரகசிய திட்டம் - அதிரடி அறிவிப்புக்கு தயாராகும் பேஸ்புக்?

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேஸ்புக்
பேஸ்புக்
Published on

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின.

இந்த நிலையில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக்கின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப வலைதளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது பற்றிய கேள்விக்கு யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய பெயர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com