ரூ. 1900 விலையில் ஆப்பிள் லோகோ கொண்ட சிறிய துணி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
பாலிஷிங் துணி
பாலிஷிங் துணி
Published on

ஆப்பிள் நிறுவனம் அன்லீஷ்டு 2021 நிகழ்வில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றில் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச், 16 இன்ச் மேக்புக் ப்ரோ, ஏர்பாட்ஸ் 3 போன்ற சாதனங்கள் அடங்கும். விர்ச்சுவல் நிகழ்வு நிறைவுற்றதும் ஆப்பிள் துணி ஒன்றை தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது.

இந்த துணியை கொண்டு ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர்பாட்ஸ் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களை சுத்தம் செய்ய முடியும். துணிக்கான விவர குறிப்பில் அனைத்து ஆப்பிள் சாதனங்களின் டிஸ்ப்ளேக்கள், நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் சுத்தம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மென்மையான துணியின் மீது ஆப்பிள் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவில் இந்த துணியின் விலை ரூ. 1900 ஆகும். இது ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த துணியினை தற்போது சந்தையில் கிடைக்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என ஆப்பிள் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com