புதிய நிறத்தில் அறிமுகமான ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஐபோன் 12
ஐபோன் 12
Published on

ஆப்பிள் தனது ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களின் பர்பில் நிற வேரியண்டை அறிமுகம் செய்தது. முன்னதாக இரு ஐபோன்களும் புளூ, கிரீன், பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

புதிய நிறம் கொண்ட ஐபோன்கள் ஐஒஎஸ் 14.5 வெர்ஷன் கொண்டிருக்கும். இந்த ஒஎஸ் பயனர் முகக்கவசம் அணிந்து இருந்தால் ஆப்பிள் வாட்ச் கொண்டு  ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி கொண்டுள்ளது. 

ஐபோன் 12 மற்றும் ஐபோன் மினி மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, HDR மற்றும் டால்பி விஷன் வசதி கொண்டிருக்கின்றன. இத்துடன் செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன. 

இரு மாடல்களிலும் ஏ14 பயோனிக் பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் மற்றும் நைட் மோட் டைம்-லேப்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com