பழைய ஐபோன்கள் விலையை அதிரடியாக குறைத்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் விலை இந்தியாவில் மாற்றப்பட்டது.
ஐபோன் 11
ஐபோன் 11
Published on

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் 12 மாடல்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களின் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன் 11 (64 ஜிபி மற்றும் 128 ஜிபி) விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 256 ஜிபி விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 14 ஆயிரமும், ஐபோன் 12 மினி விலை ரூ. 10 ஆயிரமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய விலை விவரம்

ஐபோன் 11 (64 ஜிபி) - ரூ. 49,900

ஐபோன் 11 (128 ஜிபி) - ரூ. 54,900

ஐபோன் 12 மினி (64 ஜிபி) - ரூ. 59,900

ஐபோன் 12 மினி (128 ஜிபி) - ரூ. 64,900

ஐபோன் 12 மினி (256 ஜிபி) - ரூ. 74,900

ஐபோன் 12 (64ஜிபி) - ரூ. 65,900

ஐபோன் 12 (128ஜிபி) - ரூ. 70,900

ஐபோன் 12 (256ஜிபி) - ரூ. 80,900

ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன்களின் விலை எம்.ஆர்.பி. அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com