அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் முன்பதிவு துவக்கம்

நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல்
அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல்
Published on

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த செயலிக்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த கேம் ஐஒஎஸ் தளத்திலும் வெளியாக இருக்கிறது.

முதற்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இரு சந்தைகளில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றி முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கணினி மற்றும் கன்சோல்களை தொடர்ந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் பதிப்பும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், கேமினுள் அப்டேட்களை பெற சில அம்சங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் தொடுதிரை வசதி கொண்ட சாதனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தரப்பு கண்ட்ரோலர்களுக்கான வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com