மூன்று சேவைகளுக்கு ஒரே பில் - ஏர்டெல் அசத்தல் சலுகை அறிவிப்பு

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஒரே பில் மூலம் பல சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல்
Published on

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் எனும் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் போஸ்ட்பெயிட், டி.டி.ஹெச். மற்றும் பைபர் சேவைகளுக்கு ஒரே பில் மூலம் பணம் செலுத்தலாம். 

புது திட்டத்தை செயல்படுத்த பயனர்கள் ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பருக்கு தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை இணைத்து பில் பெற வேண்டும் என்பதை தெரிவிக்கலாம். இவ்வாறு இரண்டுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு ஒரே பில் பெற முடியும். ஏர்டெல் பிளாக் பிக்சட் திட்டத்தின் துவக்க விலை ரூ. 998 ஆகும்.

ஏர்டெல் பிளாக் கட்டண விவரம்:

டி.டி.ஹெச். கனெக்ஷன் + 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 998 

டி.டி.ஹெச். கனெக்ஷன் + 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,349 

பைபர் கனெக்ஷன் + 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,598

பைபர், டி.டி.ஹெச். கனெக்ஷன் + 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 2,099

இந்த சலுகைகளை விரும்பாத பட்சத்தில் பயனர்கள் தங்களுக்கென சொந்தமாக ஏர்டெல் பிளாக் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு இரண்டு அல்லது அதற்கும் அதிக சேவைகளை இணைக்க வேண்டும். இந்த திட்டம் ஏர்டெல் பிரீபெயிட் இணைப்புகளுக்கு பொருந்தாது.

X

Maalai Malar
www.maalaimalar.com