மலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஸ்வைப் நிறுவனத்தின் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி:

ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் எலைட் டூயல் என அழைக்கப்படுகிறது. புதிய ஸ்வைப் எலைட் டூயல் ஸ்மார்ட்போன் இரட்டை பிரைமரி கேமரா கொண்ட இந்தியாவின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வைப் எலைட் டூயல் சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 854x480 பிக்சல் டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

- 1 ஜிபி ரேம்

- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்

- டூயல் சிம் ஸ்லாட்

- 8 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் ஸ்வைப் எலைட் டூயல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபுட்பால் சலுகையின் கீழ் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com