சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #GalaxyS10 #Smartphone
சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்
Published on

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது. புதிய எஸ்10 சீரிசில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 

இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மார்ச் 6 ஆம் தேதி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விநியோகம் மார்ச் 8 ஆம் தேதி துவங்குகிறது. எனினும் ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதியே விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com