கேலக்ஸி எஸ்10 சீரிஸ் புதிய ரென்டர்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10 #Smartphone
புகைப்படம் நன்றி: winfuture
புகைப்படம் நன்றி: winfuture
Published on

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் கேலக்ஸி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமராவும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இரு செல்ஃபி கேமராக்களும் வழங்கப்படுகிறது. பின்புறம் ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால் புதிய ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரத்யேகமாக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்படுகிறது. இந்த பட்டன் வழக்கம்போல வால்யூம் ராக்கரின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது.

புகைப்படம் நன்றி: winfuture

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் 2960x1440 பிக்சல் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9820 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி எஸ்10 லைட் எனும் புதிய ஸ்மார்ட்போனும் இம்முறை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது. நிறங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

கேலக்ஸி எஸ்10 இ வேரியன்ட் எல்லோ நிறம் கொண்டிருக்கும் என தெரிகிறது. விலையை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 5.8 இன்ச் வேரியன்ட் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.60,730 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எஸ்10 சீரிஸ் டாப்  எண்ட் மாடலாக அறியப்படும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 1 டி.பி. (1000 ஜி.பி.) மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,27,005 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com