

புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதோடு ஏர்டெல் தளத்தில் மாத தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகமான கேலக்ஸி நோட் 9 மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் (128 ஜிபி மட்டும்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 9 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டுகளை கொண்டு வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பயன்படுத்தலாம்.
அறிமுக சலுகைகள்:
சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்: