சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் புதிய சலுகை சாக்லேட் வாங்குவோருக்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. இலவசமாக வழங்கப்படும் 1 ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி? #Jio #offer
சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
Published on

ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் புதிய சலுகையில் பயனர்கள் சாக்லேட் வாங்கினால் போதும்.

கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இலவச டேட்டா பெற பயனர்கள் டெய்ரி மில்க் சாக்லேட் கவரின் புகைப்படத்தை மைஜியோ செயலியில் பதிவேற்றினால் போதும்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெய்ரி மில்க் இணைந்து வழங்கும் இலவச டேட்டாவை பெற என்ன செய்ய வேண்டும்?

- மைஜியோ ஆப் சென்று ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்

- அடுத்து சலுகையில் பங்கேற்கக் கோரும் PARTICIPATE NOW ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- உங்களது மொபைல் கேமராவை இயக்க செயலியை அனுமதிக்க வேண்டும்

- டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுக்க வேண்டும்

- புகைப்படம் அப்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டும்

- இறுதியில் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

பயனர்களின் கணக்கில் 1 ஜிபி இலவச டேட்டா கிரெடிட் ஆக ஏழு முதல் எட்டு நாட்கள் வரை ஆகும் என ஜியோ தெரிவித்துள்ளது. ஒரு ஜியோ எண்ணிற்கு ஒருமுறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும். இலவச டேட்டா வேண்டாம் என்போர், டெய்ரி மில்க் மற்றும் பிரதாம் அறக்கட்டளைக்கு வழங்கி, குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ முடியும். #Jio #offer

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com