ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி3
ரியல்மி சி3
Published on

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி சி2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் ரியல்மி யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கொண்டிருக்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

ரியல்மி சி3 சிறப்பம்சங்கள்:

- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு

- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்

- ARM மாலி-G52 2EEMC2 GPU

- 3 ஜி.பி. LPDDR4x ரேம், 32 ஜி.பி. eMMC 5.1 மெமரி

- 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 10

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF

- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4

- 5 எம்.பி. செல்ஃபி கேமரா

- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

- மைக்ரோ யு.எஸ்.பி.

- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

- 10 வாட் சார்ஜிங்

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் பிளேசிங் ரெட் மற்றும் ஃபுரோசென் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 14-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com