சென்னை பூர்விகாவில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சென்னை பூர்விகாவில் ரகுல் பிரீத் சிங் வெளியிட்டார். #Galaxy S10
Published on

சர்வதேச சந்தையில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்தியாவில் கேலக்ஸி எஸ்10 பேஸ் வேரியண்ட் விலை ரூ.66,900, கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை ரூ.73,900 என்றும் கேலக்ஸி எஸ்10இ விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இத்துடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com