ஒப்போ ரெனோ இந்திய வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ ரெனோ இந்திய வெளியீட்டு விவரம்
Published on

ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெனோ ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதன் 10X லாஸ்-லெஸ் சூம் வசதி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது. 

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ அறிவித்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் 10x லாஸ்-லெஸ் சூம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இரண்டு ரெனோ போன்களிலும் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம் பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX286 பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு எடிஷனில் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. 

உயர்-ரக மாடலில் 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வித்தியாசமாக பாப்-அப் ஆகும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை ரெனோ ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. 

இத்தனை சிறப்பம்சங்களை இயக்க ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இ்ததுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com