இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் எடிஷன் விவரங்கள்

ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் 2077 எடிஷன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச்
ஒன்பிளஸ் வாட்ச்
Published on

ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் 2077 எடிஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

எனினும், புதிய வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் ஸ்டிராப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ஸ்டிராப்களில் கேம் லோகோ மற்றும் மஞ்சள் நிறம் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் ஸ்மார்ட்வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஸ்டிராப்களில் வித்தியாச கட்கள், ஒன்பிளஸ் மற்றும் சைபர்பண்க் பிராண்டிங் கொண்டிருக்கிறது. மேலும் இது மேட் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

முந்தைய  தகவல்களில் ஒன்பிளஸ் வாட்ச் வட்ட விட டையல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதுதவிர இந்த மாடல் பிஐஎஸ் தளத்திலும் சான்று பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com