ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ்
Published on

ஒன்பிளஸ் நிறுவனம் வயர்லெஸ் பவர் கன்சோர்டியத்தில் இணைந்திருக்கிறது. இந்த அமைப்பு வயர்லெஸ் சார்ஜிங் தரத்தினை உருவாக்கி அதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வருகிறது. ஒன்பிளஸ் இந்த அமைப்பில் இணைந்து இருப்பதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

எனினும், ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுமா அல்லது ஒன்பிளஸ் 8டி மாடல்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. வயர்லெஸ் பவர் கன்சோர்டியத்தில் தற்சமயம் ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., ஒப்போ, ஹெச்.எம்.டி. குளோபல், ஹூவாய், அசுஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.

ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைக்கும் முயற்சியின் அங்கமாக வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஒன்பி்ளஸ் தனது சாதனங்களில் வழங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்திற்கு மாற்றாக தனது ஸ்மார்ட்போன் மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது. 

புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் மற்றும் 5ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே சிப்செட் ஒன்பிளஸ் 8 மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com