அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் அமேசான் தளத்தில் லீக் ஆகியிருக்கிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்
ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2020 ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் மாடல்கள் உருவாகி வருகின்றன. 

அந்த வகையில் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான வலைதள பக்கங்களின் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகியுள்ளன. வலைதள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

அமேசான் இந்தியா வலைதளத்தில் ஸ்மார்ட்போன் உள்பட பல்வேறு பொருட்களுக்கு விளம்பர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் புதிய பிரிவின் கீழ் மொபைல் போன்கள்: ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்களுக்கு 1 சதவீதம் விளம்பர கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கு அடுத்த இடத்தில் ஒன்பிளஸ் 7டி ப்ரோ, ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென், ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்ற மாடல்கள் இடம்பிடித்திருக்கின்றன.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் மற்றும் 5ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே சிப்செட் ஒன்பிளஸ் 8 மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com