22 நாட்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்த ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 விற்பனை துவங்கிய 22 நாட்களில் வரலாறு காணாத விற்பனையை பதிவு செய்திருக்கிறது.
22 நாட்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்த ஒன்பிளஸ் 6
Published on

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 விற்பனை துவங்கிய 22 நாட்களில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இத்தகைய வரவேற்பு பெற்றிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு வாக்கில் முதல் ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்கள் விற்பனை துவங்கிய மூன்று மாதங்களில் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்ற கொள்கை மூலம் தலைசிறந்த அனுபவம் வழங்கும் ஸ்மார்ட்போன்களை உருவாக்க முடிந்ததாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் மற்றும் குவால்காம் போன்ற நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்கள், டெலிகாம் நிறுவனங்களுடனான கூட்டணி உள்ளிட்டவை நிறுவனத்தை உலகின் 36 நாடுகளில் வியாபாரம் செய்ய உதவியிருக்கிறது.

ஒன்பிளஸ் 6 வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் கம்யூனிட்டி செலபிரேஷன் சீசன் (Community Celebration Season) அறிவித்துள்ளது. இந்த விற்பனை கொண்டாட்டம் ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 26 வரை என 12 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த தேதிகளில் அந்நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

ஒன்பிளஸ் அறிவித்திருக்கும் சலுகைகள்:

- தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.2000 கேஷ்பேக் மற்றும் பிரபல வங்கிகளின் வட்டியில்லா மாத தவனை முறை வசதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

- இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.1500 வரை தள்ளுபடி பெற முடியும். 

- அமேசான் வழங்கும் ஒன்பிளஸ் ரெஃபரல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் வாரன்டி வழங்கப்படுகிறது.

- ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்குவோரில் இரண்டு அதிர்ஷ்டசாலிகள் ஒவ்வொரு நாளும் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வென்றிட முடியும்.

- இத்துடன் வாரன்டி இல்லாத சாதனங்களிலும் மென்பொருள் ஃபிளாஷிங் இலவசமாக செய்யப்படுவதோடு, உபகரணங்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com