பென்ச்மார்க் தளத்தில் ஒன்பிளஸ் 6

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் தளத்தில் கசிந்திருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
கோப்பு படம்: ஒன்பிளஸ்
கோப்பு படம்: ஒன்பிளஸ்
Published on

புதுடெல்லி:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ஒன்பிளஸ் 6 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பென்ச்மார்க்கிங் தளம் மூலம் வெளியாகியுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக குவால்காம் ஸ்னப்டிராகன் 845 சிப்செட் இருக்கிறது. ஒன்பிளஸ் சார்ந்த தகவல் மூலம் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகியுள்ளது. 

பென்ச்மார்க்கிங் மூலம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிநவீன ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஒன்பிளஸ் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் புதிய பிராசஸர்கள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் A6000 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பென்ச்மார்க்கிங் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 276510 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 

பென்ச்மார்க் புள்ளிகளின் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனின் செயல்திறன் தெளிவாக தெரிகிறது. சந்தையில் அறிமுகமாகும் போது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன், சியோமி விரைவில் வெளியிட இருக்கும் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமியின் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதே தேதியில் ஹூவாய் நிறுவனத்தின் P20, P20 லைட் மற்றும் P20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக Mi மிக்ஸ் 2s ஸ்மார்ட்போனின் பென்ச்மார்க்கிங் புள்ளிகள் வெளியானது. இதில் 273741 புள்ளிகளை Mi மிக்ஸ் 2 பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. புதிய ஒன்பிளஸ் 6 வடிவமைப்பு ஐபோன் X போன்று இருக்கும் என்றும் பென்ச்மார்க்கிங் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மே அல்லது ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம். 

6.0 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களுடன் ஸ்கிரீன், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டேஷ் சார்ஜிங், டூயல் சிம் சப்போர்ட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப், முந்தைய ஒன்பிளஸ் 5T மாடலை விட மேம்படுத்தப்பட்ட கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com