இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,000 குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.
இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,000 குறைப்பு
Published on

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் பின் ஒரு மாதம் கழித்து 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அறிமுகமான நான்கு மாதங்களில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7000 வரை குறைக்கப்பட்டது. விலை குறைப்புக்கு பின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.22,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் குறைக்கப்பட்ட புதிய விலை ஏற்கனவே அந்நிறுவன வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் புதிய விலையில் நோக்கியா 8.1 கிடைக்கும்.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2246x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்

- அட்ரினோ 616 GPU

- 4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி

- 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 9.0 பை

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS

- 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்

- 20 எம்பி செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3500 எம்ஏஹெச் பேட்டரி

- ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com