பட்ஜெட் விலையில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokia5Plus #smartphone
பட்ஜெட் விலையில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் தனது புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

நோக்கியா 5.1 பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டு இருந்தாலும், ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது,

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே

- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்

- மாலி-G72 MP3 GPU

- 3 ஜிபி ரேம்

- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF

- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2

- கைரேகை சென்சார்

- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 1-ம் தேதி முதல் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com