ரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 110 (2019)
நோக்கியா 110 (2019)
Published on

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 110 (2019) ஃபீச்சர் போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே மொபைல் போன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720 ஃப்ளிப் 4ஜி போன் மாடல்களுடன் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்சமயம் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 110 (2019) மாடலில் 1.77 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே, SPRD 6531E பிராசஸர், 4 எம்.பி. ரேம், 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள் கொண்டு இயங்கும் நோக்கியா 110 (2019) மாடலில் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர், ஸ்னேக் கேம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் பிரைமரி கேமரா, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 110 (2019) சிறப்பம்சங்கள்:

- 1.77 இன்ச் 160x120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே

- நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்

- SPRD 6531E பிராசஸர்

- 4 எம்.பி. ரேம்

- 4 எம்.பி. இன்டெர்னல் மெமரி

- எஃப்.எம். ரேடியோ

- டார்ச்லைட்

- சிங்கில் / டூயல் சிம்

- மைக்ரோ யு.எஸ்.பி. 2.0

- 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 110 (2019) மாடல் ஓசன் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com