அசத்தல் அம்சங்களுடன் அதிநவீன இயர்பட்ஸ் அறிமுகம் செய்த நத்திங்!

இது குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அசத்தல் அம்சங்களுடன் அதிநவீன இயர்பட்ஸ் அறிமுகம் செய்த நத்திங்!
Published on

நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுடன் நத்திங் இயர் (3a) மாடலையும் அறிமுகம் செய்தது. புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரிய இயர்போன் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதசி, 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர், LDAC சப்போர்ட், ப்ளூடூத் 6 கனெக்டிவிட்டி உள்பட ஏராளமான அம்சங்கள் உள்ளன.

நத்திங் போன் (4b) போன்றில்லாமல் இந்த இயர்போன் சர்வதேச சந்தையில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் அறிமுகம் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனினும், இது குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அம்சங்கள்:

புதிய நத்திங் இயர் (3a) மாடல் 12mm டைனமிக் டிரைவர், 32-ohm இம்பென்டன்ஸ் உடன் வருகிறது. இந்த மாடலில் LDAC ஹை-ரெஸ் வயர்லெஸ் சான்று, ஸ்டேடிக் ஸ்பேஷியல் ஆடியோ, கஸ்டம் EQ, அட்வான்ஸ்டு EQ மற்றும் நத்திங் X செயலி மூலம் ப்ரோஃபைல் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் அடாப்டிவ் ANC, 45db வரை நாய்ஸ் ரிடக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட் ஒவ்வொன்றிலும் மூன்று மைக்ரோபோன்கள் உள்ளன. இது டிரான்ஸ்பேரன்ஸி மோட் மற்றும் அழைப்புகளின் போது என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டி:

நத்திங் இயர் (3a) மாடலில் ப்ளூடூத் 6 வசதி, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, SBC, AAC, LDAC கோடெக் வசதி உள்ளது. இவை ஆண்ட்ராய்டு 8 மற்றும் ஐஓஎஸ் 13 அல்லது அதற்கும் பிறகு வெளியான ஓ.எஸ்.களுடன் சப்போர்ட் செய்யும். இத்துடன் கூகுள் ஃபாஸ்ட் பேர், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் மற்றும் லோ-லேடன்சி மோட் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த இயர்பட்களில் 55mAh பேட்டரியும், இதனுடன் வரும் சார்ஜிங் கேஸில் 500mAh பேட்டரியும் உள்ளது. இது ANC பயன்படுத்தினால் 10 மணி நேர பிளேபேக், AAC ஆஃப் செய்யப்பட்டால் அதிகபட்சம் 42 மணி நேரம் வரை பிளேபேக் வழங்கும் என்று நத்திங் தெரிவித்துள்ளது.

விலை விவரங்கள்:

புதிய நத்திங் இயர் (3a) மாடல் பிளாக், பின்க், வைட் மற்றும் எல்லோ என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை சர்வதேச சந்தையில் 99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,800 முதல் துவங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com