6,000mAh பேட்டரியுடன் விரைவில் வெளியாகும் சியோமி Foldable ஸ்மார்ட்போன்

இத்தகைய பேட்டரி கொண்டிருக்கும் முதல் அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும்.
Xiaomi 18 Fold Teaser
Published on

சியோமி நிறுவனம் தனது சியோமி 18 ஃபோல்டு ஸ்மார்ட்போனினை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது.

வெளியீட்டை ஒட்டி சியோமி நிறுவனம் தனது புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 3 நானோமீட்டரில் உருவாகி இருக்கும் Xring O3 சிப் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் LPDDR6 ரேம் கொண்ட முதல் மாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை சியோமி ஒருபக்கம் வெளியிடும் நிலையில், இந்த மாடல் பற்றிய புது தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரபல டிப்ஸ்டர் பால்டு பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் தெரியவந்துள்ளது.

பேட்டரி விவரங்கள்:

டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 6000mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இத்தகைய பேட்டரி கொண்டிருக்கும் முதல் அகலமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும்.

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது கேலக்ஸி Z ஃபோல்டு 8 மாடலில் 4880mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ஹூவாய் ப்யூரா எக்ஸ் வியூ மாடலில் சற்றே பெரிய 5300mAh பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமின்றி புதிய சியோமி 18 ஃபோல்டு மாடலில் 67 வாட் வயர்டு மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி 18 ஃபோல்டு மாடலில் 7.6 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 4, புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் புதிய டேப்லெட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிது. இந்த மாடல் சியோமி பேட் 9 ப்ரோ மேக்ஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் Xring O3 சிப்செட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com