200MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனில் சியோமியின் புதிய Xring O3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
Xiaomi 18 Fold
Published on

சியோமி 18 ஃபோல்ட், நிறுவனத்தின் புதிய புத்தக வடிவ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8-ஐ தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒரே மாதிரியாக அகலமான, கச்சிதமான வடிவமைப்பை கொண்டுள்ளன. சியோமி 18 ஃபோல்டு மாடலில் 5.38-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.58-இன்ச் ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் சியோமியின் புதிய Xring O3 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

சியோமி 18 ஃபோல்டு மாடலில், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 5.38-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே மற்றும் அதே 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 7.58-இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், சியோமி நிறுவனத்தின் 3nm டெகா-கோர் Xring O3 AI முதன்மை SoC மூலம் இயக்கப்படுகிறது.

இத்துடன் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB UFS 4.1 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன், ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 4 கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 200MP OIS பிரைமரி கேமரா, OIS கொண்ட 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணும் வசதியை ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு டூயல் நானோ-சிம் சப்போர்ட், 5ஜி, வைபை 7, ப்ளூடூத் 6.0, என்எஃப்சி மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP58 மற்றும் IP59 சான்று பெற்றுள்ளது.

சியோமி 18 ஃபோல்டு மாடல் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விரித்த நிலையில் இது 5.02 மிமீ மற்றும் மடித்த நிலையில் 10.68 மிமீ அளவுடையது, மேலும் இதன் எடை 219 கிராம் ஆகும்.

விலை மற்றும் முன்பதிவு:

சியோமி 18 ஃபோல்டு மாடலின் 12GB + 256GB வேரியன்ட்டின் ஆரம்ப விலை CNY 10,999 (சுமார் ரூ. 1,55,000) ஆகும். இதன் 12GB + 512GB மாடலின் விலை CNY 11,999 (சுமார் ரூ. 1,69,000) ஆகவும், 16GB + 512GB மாடலின் விலை CNY 12,999 (சுமார் ரூ. 1,83,000) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LPDDR6 ரேம் கொண்ட உயர் ரக 16GB + 1TB மாடலின் விலை CNY 14,999 (சுமார் ரூ. 2,11,300) ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கருப்பு, நிஷினோ ரெட் மற்றும் வார்ம் கோல்ட் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது .

சியோமி, LPDDR6 ரேம் உடன் கூடிய 16GB + 1TB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைப்பில், செராமிக் ஸ்பெஷல் எடிஷன் ஒன்றை CNY 15,999 (தோராயமாக ரூ. 2,25,400) விலையில் வழங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com