அசத்தல் அம்சங்களுடன் புது Foldable போன் அறிமுகம் செய்த விவோ

புதிய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
அசத்தல் அம்சங்களுடன் புது Foldable போன் அறிமுகம் செய்த விவோ
Published on

விவோ நிறுவனம் தனது சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: விவோ X ஃபோல்டு 6 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 8.02 இன்ச் சாம்சங் M14 மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே, 6.51 இன்ச் கவர் ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்:

விவோ X ஃபோல்டு 6 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின்ஓஎஸ் 6 மூலம் இயங்குகிறது. இதில் 8.02 இன்ச் 2504x2312 பிக்சல் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 6.51 இன்ச் 1120x2528 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே கொண்ட கவர் ஸ்கிரீன் உள்ளது. மேலும், IP58 + IP59 ரேட்டிங் கொண்ட டிஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் 9000 சூப்பர் சிப்செட், ARM Mali G1 அலட்ரா GPU, அதிகபட்சம் 16 ஜபி ரேம், 1 டிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ X ஃபோல்டு 6 மாடல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 40 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட் GPS, GLONASS, BeiDou, Galileo, QZSS மற்றும் NavIC வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

புதிய விவோ X ஃபோல்டு 6 மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் டாப் எண்ட் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,53,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிளாக் கோல்டு எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1,57,000 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் புளூ ஹோல், போலார் நைட் மற்றும் சால்ட் லேக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com