7,500mAh பேட்டரியுடன் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
Redmi 17 5G
Published on

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிரான்டு தனது முற்றிலும் புதிய ரெட்மி 17 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையிலும் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் சிப்செட், LPDDR4x ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சீன சந்தையில் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனுடன் அதன் 4ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா சிப்செட் கொண்டிருக்கிறது.

அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 17 5ஜி மாடலில் 6.9 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி8300 பிராசஸர், 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு சார்ந்த சியோமியின் சொந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்.எப்.சி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

மலேசிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 769 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 18,000 என தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 869 ரிக்கெட்ஸ் இந்திய மதிப்பில் ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com