7.1 விர்ச்சுவல் சவுண்ட், அதிநவீன சென்சார்களுடன் புது கேமிங் ஹெட்போன் அறிமுகம்!

இந்த ஹெட்போனில் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.
Noise Clutch HP-P01 Gaming Headphone
Published on

நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் கேமிங் ஹெட்போன் சந்தையில் களமிறங்கியது. கிளட்ச் HP-P01 என அழைக்கப்படும் புதிய ஹெட்போன் நாய்ஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஹெட்போன் மாடல் ஆகும். இந்த ஹெட்போன் மொபைல் சாதனங்கள், கணினி மற்றும் கன்சோல் கொண்டு கேமிங் செய்வோருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புது ஹெட்போனில் 50மில்லிமீட்டர் டிரைவர், 24ms வரையிலான லோ-லேடன்சி வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், ஆர்.ஜி.பி. லைட்டிங் மற்றும் அதிகபடசம் 40 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

அம்சங்கள்:

புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 மாடல் 50mm டைனமிக் டிரைவர் மற்றும் 20Hz to 20kHz frequency response வழங்குகிறது. இத்துடன் இந்த ஹெட்செட் ஸ்டீரியோ மற்றும் டாகிள் செய்யக்கூடிய 7.1 விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது தெளிவான ஆடியோவை உறுதி செய்யும் வகையில் இந்த ஹெட்போனில் கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போன் 2.4GHz வயர்லெஸ், ப்ளூடூத் 6 மற்றும் 3.5எம்.எம். வயர்டு கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இத்துடன் வயர்லெஸ் லேடன்சி 24ms வரையிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனை கணினி, லேப்டாப், சோனி பிளேஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் கன்சோல், நின்டென்டோ ஸ்விட்ச் மற்றும் மொபைல் சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

புதிய நாய்ஸ் கிளட்ச் HP-P01 ஹெட்போனின் இந்திய விலை ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்ட்டுள்ளது. இந்த ஹெட்போன் நாய்ஸ் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஹெட்போன் பிளாக்\ரெட், பர்ப்பிள்\கோல்டு மற்றும் கிரே\கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஹெட்போனின் அதிகாரப்பூர்வ வினியோகம் இம்மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் எ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com