கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய ஆண்ட்ராய்டு மால்வேர் கண்டுபிடிப்பு

பயனர்களின் கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய மால்வேர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
பிளாக்ராக்
பிளாக்ராக்
Published on

சமூக வலைதளம், தகவல் பரிமாற்றம் மற்றும் டேட்டிங் செயலிகளை குறிவைக்கும் புதிய ஆண்ட்ராய்டு மால்வேரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். 

பிளாக்ராக் என அழைக்கப்படும் இந்த மால்வேர் பேங்கிங் ட்ரோஜன் ஆகும். பேங்கிங் ட்ரோஜன் என்றாலும் இது பேங்கிங் அல்லாத செயலிகளையும் குறிவைக்கிறது. முதலில் கூகுள் அப்டேட் போன்று இயங்கி தேவையான அனுமதி பெறப்பட்டதும், ஆப் டிராயரில் இருந்து ஐகானை மறைய செய்து தகவல் சேகரிக்கும் பணிகளை துவங்குகிறது.

நெதர்லாந்தை சேர்ந்த திரெட்ஃபேப்ரிக் எனும் சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம் மே மாத வாக்கில் பிளாக்ராக் மால்வேர் விவரங்களை கண்டறிந்தது. இது பயனர் குறியீடு, கடவுச்சொல் மற்றும் கிரெட்  கார்டு விவரங்களை திருடும் திறன் கொண்டிருக்கிறது.

வழக்கமான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் செயலிகளை போன்றே பிளாக்ராக் மால்வேர் இருக்கிறது. எனினும், இது 337 செயலிகளை குறிவைத்து செயல்படுகிறது. இது வழக்கமான மால்வேர்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com