

பார்சிலோனா:
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
5.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக ஹெச்.டி.ஆர். ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. முந்தைய XZ2 ஸ்மார்ட்போன் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருநம்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் பாலி கார்போனேட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய ஸ்மார்ட்போனில் கீறல்கள் விழாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கும் XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனில் 19 எம்.பி. மோஷன் ஐ கேமரா, 1/ 2.3″ Exmor RS மெமரி சென்சார், 960 fps சூப்பர் ஸ்லோ மோ மோஷன் வீடியோ, பிரெடிக்டிவ் கேப்ச்சூர், ஆண்டி-டிஸ்டார்ஷன் ஷட்டர், ட்ரிப்பில் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பம், தெளிவான வீடியோக்களை எடுக்க 5-ஆக்சிஸ் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி, 4K HDR ரெக்கார்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் 5 எம்பி செல்ஃபி, IP 65/68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிரைலூமினஸ் ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
- சிங்கிள் / டூயல் சிம்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP65/IP68)
- 19 எம்பி பிரைமரி கேமரா, எக்ஸ்மோஸ் RS sensor, 1/2.3″ சென்சார்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, 1/ 5″ Exmor RS சென்சார் f/2.2
- யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0
சோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் சில்வர், மோஸ் கிரீன், கோரல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. மார்ச் மாதம் முதல் சர்வதேச சந்தைகளில் வெளியாக இருக்கும் சோனி எக்ஸ்பீரியா XZ2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. #MWC2018 #XperiaXZ2Compact